உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்சங்கத்தினர் மடிப்பிச்சை போராட்டம் 

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்சங்கத்தினர் மடிப்பிச்சை போராட்டம் 

சிவகங்கை: அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்ஷன் ரூ.6750 வழங்க கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கையில் மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், ஒருங்கிணைப்பாளர் அயோத்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் மாரியப்பன் வரவேற்றார். ஐ.சி.டி.எஸ்., ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் வாசுகி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குகன் சண்முகம் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரேசன், ஐ.சி.டி.எஸ்., சங்க மாவட்ட தலைவர் விக்டோரியா மேரி, பணியாளர் சங்க மாநில துணை தலைவர் அங்காளேஸ்வரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார், செயலாளர் செல்வகுமார், மாநில செயலாளர் சங்கரநாராயணன் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சரோஜினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை