மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது
12-Jul-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு ஜூலை 28ல் தேரோட்டம் நடக்கிறது. இக்கோயிலில் எழுந் தருளியுள்ள வயிரவருக்கு பிரமோற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 20 காலையில் கொடியேற்றி, மாலையில் காப்புக்கட்டி விழா துவங்கியது. இரவு 7:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி வலம் வந்தார். தொடர்ந்து தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 7:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.ஜூலை 28 ல் காலை 9:15 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், இரவு 7:00 மணிக்கு தேர் வடம் பார்த்தலும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரியுடன், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப் பாடும், இரவில் பூப் பல்லக்கில் சுவாமி எழுந் தருளலும் நடைபெறும். ஜூலை 30 காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்தி களுக்கும், வயிரவ சுவாமிக்கும் அபிேஷக,ஆராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஏற்பாட்டினை ஏழகப் பெருந்திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.
12-Jul-2025