மாடு பிடி வீரருக்கு நாட்டு மாடு வழங்கல்
கீழடி: அமெரிக்கா, டெக்சாஸ் மாகாண ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கைக்கான அமைப்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த வீரர் பூவந்தி அபி சித்தருக்கு கன்றுடன் கூடிய நாட்டு பசுவை பரிசாக வழங்கியது.கீழடி அருங்காட்சியக வாசலில் நடந்த விழாவில் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான ஆலோசகர் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் நாட்டு மாடு, கன்றினை வழங்கினார். மேலும் மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கினார். விழாவில் அமைப்பின் செயலாளர் பெருமாள் அண்ணாமலை, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில்: உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் ஆதரவு காரணமாக ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளாக தமிழ் பண்பாட்டு பாராட்டு விழா நடந்து வருகிறது, என்றார்