உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தம்பதிக்கு மங்கல பொருள் வழங்கல்

தம்பதிக்கு மங்கல பொருள் வழங்கல்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 100 மூத்த தம்பதிகளுக்கு மங்கல பொருள் வழங்கும் விழா நடந்தது. இவர்களுக்கு ரூ.2,500 மதிப்பில் வேட்டி, சட்டை, புடவை, மங்கல பொருட்கள் வழங்கினர். ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி தலைமை வகித்தார். உதவி கமிஷனர் கவிதா வரவேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி