மேலும் செய்திகள்
சேலம் மாநகராட்சியில் நாளை இறைச்சி கடைகளுக்கு தடை
01-Oct-2024
திருப்புவனம் : திருப்புவனத்தில் சில கோழி,மீன் இறைச்சி கடைகளில் சிறுவர்கள் பணியாற்றி வருகின்றனர்.அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.திருப்புவனத்தில் வசிக்கும் பலரும் தினசரி காலை வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தான் வீட்டில் இருப்பது வழக்கம், இவர்களை குறி வைத்து திருப்புவனத்தில் ஏராளமான இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.இறைச்சி கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்க வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக சில இறைச்சி கடைகளில் பலரும் சிறுவர்களை பணியில் அமர்த்துகின்றனர்.இறைச்சி, மீன்களில் கழிவுகளை அகற்றுவது, அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.சிறுவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வழங்குகின்றனர்.சிறுவர்களும் பலரும் பெற்றோருக்கு தெரியாமல் கடைகளில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள்தான் இறைச்சி கடைகளில் பணியாற்றுகின்றனர். இறைச்சி கடைகளில் சிறுவர்கள் பணியாற்றுவது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இறைச்சி கடைகளில் சிறுவர்களை பணியில் அமர்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Oct-2024