உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெங்காயம், தக்காளி விலை உயர்வு

வெங்காயம், தக்காளி விலை உயர்வு

மானாமதுரை: சுட்டெரிக்கும் வெயிலால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஓட்டல்களில் தக்காளி சட்னிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.மானாமதுரை வாரச்சந்தையில் கடந்த சில வாரங்களாக 4 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ. 50 எனவும் 2 கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று பல்லாரி வெங்காயமும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.70க்கும் சிறிய வெங்காயம் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.அனைத்து காய்கறிகளின் விலையும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர்ந்து காணப்பட்டது. பிரியாணிக்கு வழங்கப்படும் தயிர் வெங்காயமும் குறைந்த அளவே வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி