உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோர்ட் வளாகத்தில் கண்காட்சி திறப்பு

கோர்ட் வளாகத்தில் கண்காட்சி திறப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை பெறுவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 15100 மற்றும் இணைய வழி https://nalsa.gov.in/lsams/ முகவரி உடைய விளம்பர பதாகையை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் துவக்கி வைத்தார். பொதுமக்கள், வழக்காடிகள் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை பெற இலவச தொலைபேசி எண், இணைய வழி முகவரியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்நிரந்தர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பக்தவச்சலு, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, நீதிபதிகள் சாண்டில்யன், செந்தில்முரளி, சுப்பையா, செல்வம், ஆப்ரின் பேகம், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை