உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெரிசலிலிருந்து தப்பிக்க வெளிவட்ட சாலை

நெரிசலிலிருந்து தப்பிக்க வெளிவட்ட சாலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வெளிவட்ட சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரான சிங்கம்புணரி வேகமாக வளர்ந்து வரும் பேரூராட்சியாகும். 18 வார்டுகள் கொண்ட இங்கு கட்டுமானங்களும் மக்கள் நெருக்கமும் அதிகரித்து வருகிறது. காரைக்குடி-திண்டுக்கல் ரோடு, பெரிய கடை வீதி, பிரான்மலை ரோடு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகர்வாசிகள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்பவர்களும் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். தினமும் காலை மாலை நேரங்களில் பள்ளி வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. நகருக்குள் வராமல் புறநகர் வழியாகச் செல்ல சுற்றுவட்ட பாதை இருந்தால் நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். ஏற்கனவே நகருக்கு தெற்கே பெரியாறு கால்வாய் சாலை செல்கிறது. இதே போல் வடக்கு புறம் ஓடும் பாலாற்றை ஒட்டி புதிதாக சாலை அமைக்கும் பட்சத்தில் இரண்டு சாலைகளையும் இணைத்து வெளிவட்ட சாலையை ஏற்படுத்தலாம். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !