பழனிசாமி சிவகங்கை வருகை அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை காப்போம்' பிரசார சுற்றுப்பயணம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் முன்னாள் முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சிக்கான இடத்தேர்வு குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.சட்டசபைத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு அ.தி.மு.க., பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் வருமான பழனிசாமி பிரசார பயணத்தை துவக்கியுள்ளார். தற்போது இரண்டாம் கட்ட பயணத்தில் தென்மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை26ல் காரைக்குடியில் மாலை 4:00 மணிக்கும், திருப்புத்துாரில் மாலை 6:00 மணிக்கும் சிவகங்கையில் இரவு 8:00 மணிக்கும் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. நேற்று அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுப் பயண பிரசார இடங்களை திருப்புத்துாரில் ஆய்வு செய்தனர். முன்னதாக தனியார் மகாலில் நடந்த திருப்புத்துார் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ.,கே.கே. உமாதேவன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், இளைஞர், இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளர் பிரபு பங்கேற்றனர்.