உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பனை ஓலை பயிற்சி: சான்றிதழ் வழங்கல்

 பனை ஓலை பயிற்சி: சான்றிதழ் வழங்கல்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், நவீன தொழில்நுட்ப முறையில், பனை ஓலை மூலம் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான முகாம் அக்.29ல் துவங்கி நவ.22 வரை 25 நாட்கள் நடந்தது. அதில் பெண்கள் பனை ஓலை மூலம் கூடை, தட்டு, அலங்கார பொருட்கள், மாலை உட்பட பல்வேறு பொருட்களை தயாரிக்க பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு திருப்புத்துாரில் நடந்த விழாவில் சான்றிதழ் மற்றும் பனை ஓலை பயிற்சிக்கு தேவைப்படும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய மண்டல துணை இயக்குநர் சே.பாரதி தலைமை வகித்தார். மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் ரா.முத்துகுமார் வரவேற்றார். மாவட்ட பயிற்சியாளர் ரமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை