உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு

காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு

காரைக்குடி: காரைக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கோவிலுார் தளக்காவூர் அரியக்குடி உள்ளிட்ட ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊராட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்த 5 ஊராட்சிகளை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான பணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனர். இந்நிகழ்வில், மேயர் முத்துத்துரை, உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜன 29, 2025 09:57

செட்டிநாடு சி மையிலே சிங்கார கரைக்குடியுடன் மாநகராட்சியில் இணைந்த ஊராட்சிகளுக்கு மக்களுக்கும் வரவேற்பு அளிக்கும் செட்டிநாடு மக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை