உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டமங்கலத்தில் பங்குனி தேரோட்டம்

பட்டமங்கலத்தில் பங்குனி தேரோட்டம்

திருப்புத்துார் : பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஏப்.3ல் பங்குனி திருவிழா துவங்கியது. தினமும் காலையில் அம்பாள் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று காலை 9:30 மணி அளவில் விநாயகரும், அம்பாளும் தேரில் எழுந்தருளி, சிறப்பு அபிேஷகம் நடந்தது.நாட்டார்கள் வருகைக்கு பின் மாலை 5:35 மணிக்கு விநாயகர், அம்பாள் தேர் வடத்தை பக்தர்கள் இழுத்து சென்றனர். இன்று காலை மஞ்சுவிரட்டு, தீர்த்தம் கொடுத்தலும், இரவு பூப்பல்லக்கும், நாளை காப்பு களைதல், ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவுபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி