உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மகனின் கண்களை தானம் செய்த பெற்றோர்

மகனின் கண்களை தானம் செய்த பெற்றோர்

கீழடி : கீழடியைச் சேர்ந்த துாய்மை பணியாளர் ஒருவர் மகன் இறந்த நிலையில் அவரது கண்களை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளார்.கீழடி ஊராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன், இவருக்கு சந்திரசேகர் 24, என்ற மகன் உட்பட ஏழு பிள்ளைகள் உள்ளனர். இதில் சந்திரசேகர் கட்டட கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். பெற்றோர், உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் உயிரிழந்தார்.இதனையடுத்து உறவினர்கள், பெற்றோர் சந்திரசேகர் கண்களை தானம் செய்ய முடிவு செய்து மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி கடிதம் வழங்கினர். மகன் உயிரிழந்த போதும் அவரது கண்களை தானம் செய்த பெற்றோரை மருத்துவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை