உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டில் மோதிய மாடுகள் வாகனத்தில் சென்றவர்கள் காயம்

ரோட்டில் மோதிய மாடுகள் வாகனத்தில் சென்றவர்கள் காயம்

காரைக்குடி: காரைக்குடி நுாறடி சாலையில் மோதிக் கொண்ட மாடுகள் பைக்கில் சென்ற தம்பதியினரை தாக்கியதில் காயத்துடன் தப்பினர். காரைக்குடி மாநகராட்சியில், சாலையோரம் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் மாடுகளால், தொடர்ந்து பல்வேறு விபத்து நடந்து வருகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. காரைக்குடிநுாறடி சாலையில், நேற்று இரண்டு மாடுகள் மோதிக் கொண்டன. இதனைப் பார்த்த பொதுமக்கள் மாடுகள் மீது தண்ணீர் ஊற்றி விரட்ட முயற்சித்தனர். ஆனாலும் விடாமல் மோதிய மாடுகள், அவ்வழியாக குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியை முட்டியது. இதில் குழந்தையுடன் அவர் கீழே விழுந்து காயங்களுடன் தப்பினர்.சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை