உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் பயணிகள்

பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் பயணிகள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.இந்த பஸ் ஸ்டாண்டில் 40க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டும் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்க போதுமான வசதி செய்யப்படவில்லை. தற் போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் நிழலுக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.இங்குள்ள கடைகள் முன்புறம் 10 முதல் 20 அடி வரை ஆக்கிரமித்து பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். கடைகள் முன் நிற்கும் பயணிகளை சிலர் விரட்டி விடுகின்றனர்.எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்க கூடுதல் கூரை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி