உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முன் பதிவில்லா டிக்கெட் கவுன்டர்  பஸ் வசதியின்றி பயணிகள் தவிப்பு 

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முன் பதிவில்லா டிக்கெட் கவுன்டர்  பஸ் வசதியின்றி பயணிகள் தவிப்பு 

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவில்லா டிக்கெட் பெற தனி கவுன்டர் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகருக்குள் இருந்து ஸ்டேஷனுக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்னை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - வாரணாசி, வேளாங்கண்ணி, சிலம்பு எக்ஸ்பிரஸ், ராமநாதபுரம் - கோயம்புத்துார் சிறப்பு ரயில்கள் என பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கையில் இருந்து சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. அதே நேரம் பாசஞ்சர் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா டிக்கெட்டை பெற்று பயணிக்க, இங்கு டிக்கெட் வழங்க தனி கவுன்டர் இல்லை. ரிசர்வேஷன் டிக்கெட் வழங்கும் கவுன்டரிலேயே முன்பதிவில்லா டிக்கெட் வழங்கியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து ரிசர்வேஷன், முன்பதிவில்லா டிக்கெட்கள் பெற தனித்தனி கவுன்டர்கள் அமைத்துள்ளனர். ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை கணக்கிட்டு அரசு போக்குவரத்து நிர்வாகம் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு டவுன் பஸ்களை இயக்க வேண்டும். பஸ் வசதியின்றி ஆட்டோக்களில் ரூ.150 வரை கட்டணம் செலுத்தி ஸ்டேஷன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் போதிய டவுன் பஸ்களை விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை