உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பிளாட்பார நீட்டிப்பு பணி முடக்கம் பயணிகள் அவதி 

சிவகங்கையில் பிளாட்பார நீட்டிப்பு பணி முடக்கம் பயணிகள் அவதி 

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் 2 மற்றும் 3 வது பிளாட்பாரம் நீட்டிப்பு திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் கிடப்பில் போட்டதால், தினமும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மாவட்ட தலைநகரான சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் ராமேஸ்வரம் -- சென்னை ரயில்களும், சிலம்பு, ராமேஸ்வரம் - -வாரணாசி, கன்னியாகுமரி -- புதுச்சேரி என வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் தவிர்த்து, சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே நிர்வாகம் அம்ரூத் 2.0 திட்டத்தில் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தை தரம் உயர்த்தி கட்டுவதோடு, பிளாட்பாரங்களில் ரயில் பெட்டிகள் நிற்பதை சுட்டிக்காட்டும் விதமாக டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர். முதற்கட்டமாக அம்ரூத் திட்டத்தில் முதல் பிளாட்பாரத்தை சீரமைக்கும் திட்டத்தை விரைவில் துவக்க உள்ளனர். இதற்கு முன்னதாக 18 ரயில் பெட்டிகள் மட்டுமே நிற்கும் வகையில் உள்ள 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்தை நீட்டிப்பு செய்யும் பணிகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் துவக்கினர். ஆனால், இப்பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் ரயில் பெட்டிகள் பிளாட்பாரத்தையும் தாண்டி நிற்ப்பதால் பயணிகள் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். கிடப்பில் போட்ட 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்தை நீட்டித்து கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ