மேலும் செய்திகள்
தமிழகம் உலகின் உதிரிபாக உற்பத்தி மையமாக மாறும்!
15-Oct-2025
மானாமதுரை: மானாமதுரையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் மாற்று டயர் இல்லாத நிலையில் பஞ்சராகிவிட்டால் வழியில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. மானாமதுரையில் இருந்து சிவகங்கை, திருப்புவனம்,காளையார்கோயில், தாயமங்கலம், இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களில் மாற்று டயர் (ஸ்டெப்னி) மற்றும் அதனை கழற்றி மாற்றுவதற்குரிய உபகரணங்களும் இல்லாததால் பஸ்கள் பஞ்சரானால் நடுவழியிலேயே நீண்ட நேரம் நிற்கிறது. கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் மாற்று பஸ் வர தாமதம் ஆவதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி டெப்போவை சேர்ந்த 17ம் நம்பர் அரசு டவுன் பஸ் பழுதடைந்ததை தொடர்ந்து மாற்று பஸ் இயக்கப்பட்டது. அதுவும் நேற்று மானாமதுரையில் இருந்து திருப்புவனம் செல்லும் போது காலை 8:30 மணிக்கு பைபாஸ் மேம்பாலத்திற்கு அருகே பஞ்சராகி வழியில் நின்ற போது இப்பஸ்சிலும் மாற்று டயர் இல்லாததால் மதியம் 1:00 மணி வரை டயர் மாற்றப்படாமல் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாக்கினர். அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது: சில வருடங்களாக பஸ்களின் டயர்கள் மிகவும் மோசமாகியுள்ள நிலையில் புதிய டயர் மாற்றப்படாமல் உள்ளது. ஒவ்வொரு பஸ்சிலும் கண்டிப்பாக இருக்கவேண்டிய மாற்று டயரும், உபகரணங்களும் இல்லாமல் பஞ்சராகி விட்டால் அதனை கழற்றி மாற்ற டெப்போவில் இருந்து மாற்று டயர்களோடு ஊழியர்கள் வந்த பிறகுதான் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. அதுவரை பயணிகள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது என்றார். போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இப்பகுதியில் இயக்கப்படும் பஸ்களுக்கு புதிய டயர், மாற்று டயர்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15-Oct-2025