அடகு கடை பூட்டு உடைப்பு வெள்ளி பொருள், நகை திருட்டு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நகை அடகு கடை,டாஸ்மாக்,கோவில் வீடு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், தங்க நகை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் மெய்யப்பன் 51. இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சிலர் மதகுபட்டி கல்லல் ரோட்டில் உள்ள டாஸ்மாக்,மெய்யப்பன் நகை அடகு கடை, கோவில் வீடு பூட்டை உடைத்துள்ளனர்.இதில் கோவில் வீட்டில் இருந்த ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டே கால் பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். மெய்யப்பன் மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.