உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பென்ஷனர் குறைதீர் கூட்டம் 

பென்ஷனர் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை : பென்ஷனர்கள் மருத்துவம் செய்ததற்கான காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன் முன்னிலை வகித்தார். கருவூலக கணக்குத்துறை இயக்குனரக கூடுதல் இயக்குனர் (பென்ஷன்) அர்ச்சுணன், கணக்கு அலுவலர் அருள், கலெக்டர் பி.ஏ., (கணக்கு) சாந்த குமாரி பென்ஷனர்களுக்கு அவர்களது கோரிக்கை மனு குறித்து விளக்கம் அளித்தனர்.ஏராளமானவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பெரும்பாலும் பென்ஷனர்களிடம் மாதந்தோறும் பிடிக்கப்படும் மருத்துவ காப்பீடு திட்ட தொகையில், மருத்துவம் செய்யும் பென்ஷனர் களுக்கான செலவின தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மேலும் மருத்துவமனை நிர்வாகமும் காப்பீடு திட்டத்தில் நிர்ணயித்த செலவின தொகைக்கு மருத்துவம் செய்யாமல், கூடுதலாக கட்ட வேண்டும் என வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை