ஓய்வூதியர் சங்க கூட்டம்
சிவகங்கை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குகன் சண்முகம், பொருளாளர் சரோஜினி, மாநிலச் செயலாளர் சங்கரநாராயணன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு அனைத்து ஊழியர்களுக்கும் நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.