உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலைக்கிராமத்தில் நாடக மேடை இடித்து அகற்ற மக்கள் எதிர்ப்பு

சாலைக்கிராமத்தில் நாடக மேடை இடித்து அகற்ற மக்கள் எதிர்ப்பு

சாலைக்கிராமம் : சாலைக்கிராமத்தில் பஸ் ஸ்டாண்ட் குறுகலான இடத்தில் அடிப்படை வசதி இன்றி செயல்பட்டு வந்தது. இதற்கு அருகில் நாடக மேடையும் இருந்தது. கடந்த வருடம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக அரசு 1.30 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று எவ்வித அனுமதியும் இன்றி நாடக மேடையை இடித்து அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, நாடக மேடை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !