மேலும் செய்திகள்
இது, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய்
13-Nov-2024
காரைக்குடி : வெள்ள பாதிப்பில், தமிழக அரசு செயல்படாததால் பொறுமை இழந்த மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சகதியை வீசி உள்ளனர் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின் அவர் கூறியதாவது:தமிழகத்தில் மனித முகமற்ற ஆட்சி இருப்பது துரதிஷ்டவசமானது. சென்னையில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. நெறிமுறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. வரும் தேர்தலில் மக்கள் இதற்கு தீர்ப்பு அளிப்பார்கள். டில்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தி.மு.க., கலந்து கொள்ளாதது ஏன். மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை என்று கேட்பவர்கள், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் போகவில்லை என்று கேட்க மாட்டார்களா. தமிழக வெள்ள பாதிப்புகளில் தமிழக அரசு காவி சாயம் பூசாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் கூறிய கருத்து சரியே. வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சரியாக செயல்படாததால் பொறுமை இழந்த மக்கள் அமைச்சர் மீது சகதியை வீசியுள்ளனர் என்றார்.
13-Nov-2024