மேலும் செய்திகள்
அரசு மகளிர் கல்லுாரியில் 17-வது பட்டமளிப்பு விழா
14-Mar-2025
Final-க்கு சென்ற Mumbai Indians
14-Mar-2025
காரைக்குடி: குன்றக்குடி ஆதீன மடத்தில் திறன் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடியில் மத்தியதிறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் கல்வி நிலையத்தின் மூலம் மருத்துவமனை முதன்மை சுகாதாரப் பணியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன் உட்பட 15 தொழில் திறன்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு திறன் பட்டமளிப்பு விழா நடந்தது.மக்கள் கல்வி நிலைய தலைவர் நாச்சிமுத்து வரவேற்றார். மக்கள் கல்வி நிலைய நிறுவன தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், கிராம திட்ட குழு தலைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். விமலா நன்றி கூறினார். மகளிர் பி.எட்., கல்லுாரி செயலர் ராமநாதன் தொகுத்து வழங்கினார்.
14-Mar-2025
14-Mar-2025