சிங்கம்புணரியில் பன்றிகள் தொல்லை
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.இப்பகுதியில் சிலர் பன்றிகளை திறந்து விட்டு வளர்ப்பதால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டாக பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.நேதாஜி நகர், வடக்கு வேளார் தெரு, தாலுகா அலுவலக ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாவகாசமாக அலையும் இவை வீடுகளுக்குள் புகுந்து அசுத்தம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தொற்று நோய் ஏற்படுவதற்கு முன் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.