பிளாவடிப்பட்டி ரோடு சேதம்
காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகளில் 120 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வீரசேகரபுரம் ஊராட்சி, பிளாவடிப்பட்டியில் பல ஆண்டுகளாக ரோடு புதுப்பிக்கவில்லை. ரோடு பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் செய்தும் ரோடு புதுப்பிக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.