உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகை ஆற்றிற்குள் சிக்கிய சிறுவர்களை மீட்ட போலீஸ்

வைகை ஆற்றிற்குள் சிக்கிய சிறுவர்களை மீட்ட போலீஸ்

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் மீன்பிடிக்க சென்று ஆழத்தில்சிக்கிய சிறுவர்களை போலீசார் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த சில மாதங்களாக வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. அணைப்பகுதியில் கெழுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்வகைகள் அடித்து வரப்படுகின்றன. இதனை பிடிக்க ஆங்காங்கே கிராம மக்கள் பலரும் வலை, தூண்டில் சகிதம் முகாமிட்டு பிடிக்கின்றனர். நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் தட்டான்குளம் தடுப்பணையில் மூன்று சிறுவர்கள் மீன் பிடிக்க இறங்கினர். ஆற்றில் பள்ளங்கள் தெரியாமல் சிக்கி கொண்டனர்.மதுரை- - பரமக்குடி 4 வழிச்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிறுவர்கள்அலறியதை கேட்டனர். போலீசார் அன்பு, தனிப்பிரிவு காவலர் மருது பாண்டியன், மதுரை ஆயுதப்படை போலீஸ் சதாம் உசேன் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய சிறுவர்களை மீட்டனர்.போலீஸ் விசாரணையில் இலந்தைகுளத்தை சேர்ந்த சமயராஜா 13, அழகு 10, குணா 11, என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ