உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்ட அளவில் 1,270 மையங்களில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. திருப்புத்துாரில் இம்முகாமை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் (பொறுப்பு) பார்த்திபன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உட்பட நடமாடும் முகாம் என 1,270 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !