உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 100 அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம்; மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிதி ஒதுக்கீடு  

100 அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம்; மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிதி ஒதுக்கீடு  

சிவகங்கை : தமிழகத்தில் 100 அரசு பள்ளிகளில், 'பசுமை பள்ளி திட்டம்' செயல்படுத்த தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.20 கோடியை அரசு விடுவித்துள்ளது.காலநிலை மாற்றம் தற்போது தவிர்க்க இயலாத பிரச்னையாக உள்ளது. இளைய தலைமுறையினர் இது குறித்து அறிவதும், விளைவுகளை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் தயாராவது அவசியமாகிவிட்டது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் 'பசுமை பள்ளி திட்டத்தை' உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022-23 ல் முதற்கட்டமாக 25 பள்ளிகளில் இத்திட்டத்தை துவக்கினர். இத்திட்டத்தை மேலும் 100 அரசு பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் 'சோலார் பேனல்' அமைத்து மின்வசதி பெறுதல், பள்ளி வளாகத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பழமரங்களை வளர்த்தல் உள்ளிட்டவை இத்திட்டத்தில் அடங்கும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் 100 பள்ளிகளுக்கான நிதி ரூ.20 கோடியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுவித்துள்ளது.மதுரையில் சேடபட்டி, விராதனுார், திண்டுக்கல்லில் நத்தம்கோவில்பட்டி, பாலசமுத்திரம், காசிபாளையம், தேனியில் வீரபாண்டி, விருதுநகரில் மேட்டுக்குண்டு, வீரசோழன், ராமநாதபுரத்தில் வண்ணான்குண்டு, பழனிவலசை, சிவகங்கையில் கீழப்பூங்குடி, திருப்புத்துார், முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகள் உட்பட மாநில அளவில் 100 பள்ளிகளை தேர்வு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை