உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு நிறுவனங்களில் பொங்கல் தொகுப்பு

கூட்டுறவு நிறுவனங்களில் பொங்கல் தொகுப்பு

சிவகங்கை:கூட்டுறவு நிறுவன விற்பனை நிலையங்களில் இனிப்பு, சிறப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 3வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு விற்கப்பட உள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் விற்பனை நிலையங்களில் பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம் தலா 500 கிராம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசிபருப்பு, திராட்சை ரூ.199க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் துாள், சர்க்கரை, துவரம், கடலை, பாசி, உளுந்தம் பருப்பு, உப்பு, நீள மிளகாய், தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் துாள் உட்பட 19 பொருட்கள் ரூ.499 க்கும், பெரும் பொங்கல் தொகுப்பில் மஞ்சள் துாள், சர்க்கரை, உப்பு, துவரம், உளுந்து, கடலை பருப்பு, பச்சை பட்டாணி, பாசி பருப்பு, வெள்ளை சுண்டல் உட்பட 34 வகை பொருட்கள் ரூ.999 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.'மக்களுக்கு மளிகை பொருட்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் 1 லட்சம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ