உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுவயலில் பராமரிப்பில்லாத குப்பை வண்டிகள் பல லட்சம் செலவழித்து வாங்கியும் பயனில்லாத அவலம்

புதுவயலில் பராமரிப்பில்லாத குப்பை வண்டிகள் பல லட்சம் செலவழித்து வாங்கியும் பயனில்லாத அவலம்

புதுவயல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, யூனியன் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், கோயில்கள் உள்ளன. தவிர சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். தவிர ஏராளமான அரிசி ஆலைகளும் உள்ளன. பேரூராட்சியில் 40க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி செய்கின்றனர். 5 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் வீடுகள் தோறும் குப்பை பெறப்படுகிறது. பல லட்சம் செலவழித்து வாங்கப்பட்ட வாகனங்கள் பழுதாகி நீண்ட நாட்களாக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலக நுழைவு வாயிலேயே டயர் இல்லாமல் கற்களால் முட்டுக் கொடுக்கப்பட்டு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தவிர, துாய்மை பணியாளர்களுக்கும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படாததால் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. வெறும் கைகளில் குப்பைகளை அள்ளுகின்றனர். செடிகள் அகற்ற கருவிகள், குப்பை அள்ள கம்பு என உபகரணங்கள் எதுவும் இல்லை. செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் கூறுகையில்: தூய்மை பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பழுதாகி கிடந்தது. அது சரி செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனங்களும் தற்போது வாங்கப்பட்டுள்ளது. வீணாகி போன வண்டிகள் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !