மேலும் செய்திகள்
சிவகங்கையில் மருத்துவ முகாம்
02-Jul-2025
சிவகங்கை,: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது.கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லுாரியில் துவங்கி திருப்பத்துார் ரோடு வழியாக தாய் சேய் நல மருத்துவமனையில் நிறைவடைந்தது.கல்லுாரி முதல்வர் நாளதம் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவ கல்லுாரி டீன் சத்தியபாமா, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, துணை இயக்குனர்கள் (காசநோய்) வெள்ளைச்சாமி, (தொழுநோய்) கவிதாராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை பங்கேற்றனர். தொடர்பு அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
02-Jul-2025