மேலும் செய்திகள்
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
21 hour(s) ago
சிவகங்கை: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க பொது செயலாளர் மகாதேவய்யாவை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து சிவகங்கையில் தபால் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் செல்வன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ரத்தினபாண்டியன், பொருளாளர் நாகராஜன் மற்றும் நாகலிங்கம் உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். காரைக்குடி: காரைக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய கிராமிய ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 8வது ஊதிய குழுவில் ஜி.டி.எஸ்., ஊழியர்களையும் சேர்க்க வேண்டும், டார்க்கெட் டார்ச்சரை கைவிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில், கோட்ட செயலாளர் முருகன், பி4 செயலாளர் தர்மலிங்கம், முன்னாள் மத்திய சங்க செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினர்.
21 hour(s) ago