உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்ட செயலாளருக்கு எதிராக போஸ்டர்

மாவட்ட செயலாளருக்கு எதிராக போஸ்டர்

சிவகங்கை; சிவகங்கையில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக பன்னீர்செல்வம் நிர்வாகி போஸ்டர் ஒட்டியதாக அ.தி.மு.க.,வினர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.சிவகங்கையில் நேற்று எடப்பாடியார் கவனத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் குறுநில மன்னர் போல் நிர்வாகிகளை அடிமைப்படுத்தியும், அகமுடையார் இனத்திற்கு முக்கியத்துவமும் தராமல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட எம்.எல்.ஏ., தொகுதிகளான சிவகங்கை,காரைக்குடி,மானாமதுரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.,விற்கு அடுத்த மூன்றாவது இடத்திற்கு அ.தி.மு.க.,வை படுகுழியில் தள்ளிய சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை மாற்ற வேண்டும் என்றும், இவண் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் உண்மை விசுவாசிகள் சிவகங்கை மாவட்டம் என்று அந்த போஸ்டரில் உள்ளது.இந்த போஸ்டர் நேற்று சிவகங்கை நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இதை பன்னீர்செல்வம் அணியினர் வலைதளங்களில் பரப்பினர். ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.,வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் ஒன்றிய செயலாளர் செல்வமணி எஸ்.பி., அலுவலகத்தில் பன்னீர் செல்வம் அணி மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து மீது புகார் அளித்தனர்.புகாரில், சிவகங்கை நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரை அவதுாறு ஏற்படுத்தும் வகையிலும், முக்குலத்தோர் சமுதாயத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை துாண்டும் விதமாக சுவரொட்டிகளை சிவகங்கை ஒன்றியம் கூத்தாண்டனை சேர்ந்த ஓபிஎஸ் அணி மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து ஒட்டியுள்ளார். போஸ்டர் எங்கு அடிக்கப்பட்டது யாரால் அடிக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை. இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து கூறுகையில், எனக்கு வலைதளத்தில் இந்த போஸ்டர் படம் வந்தது. அதை நான் எப்போதும் போல் எனது முகநுாலில் பதிவிட்டேன். எனக்கும் இந்த போஸ்டர் ஒட்டியதற்கும் சமந்தம் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை