உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குண்டும் குழியுமான இணைப்பு ரோடு கே.வைரவன்பட்டி ஊராட்சி அவலம்

குண்டும் குழியுமான இணைப்பு ரோடு கே.வைரவன்பட்டி ஊராட்சி அவலம்

கண்டவராயன்பட்டி, : திருப்புத்துார் அருகே கே.வைரவன்பட்டி ஊராட்சியில் ரோட்டை புதுப்பிக்கவும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தவும், கூடுதல் ரேஷன் கடை வசதி கேட்டும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புத்துார் ஒன்றியத்தில் உள்ளது கே.வைரவன்பட்டி ஊராட்சி. சிங்கம்புணரி ரோட்டிலிருந்து கண்டவராயன்பட்டிக்கு 4 கி.மீ.துாரத்திற்கு இணைப்பு ரோடு செல்கிறது. திருப்புத்துாரிலிருந்து 2 கி.மீ. குறைவான துாரத்தில் கண்டவராயன்பட்டி செல்ல இந்த ரோடு பயன்படுகிறது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. ஆனால் இந்த ரோடு பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது.2019 ல் போடப்பட்ட இந்த ரோடு தற்போது சேதமடைந்து வாகனப்போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இந்த ரோட்டோரத்தில் செல்லும் தாழ்வான மின்கம்பிகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த ஊராட்சியைச் சேர்ந்த பரக்கினிப்பட்டிக்கு முன்பு பஸ் வசதி இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பஸ்கள் செல்லவில்லை. மீண்டும் அக்கிராமத்திற்கு பஸ் விட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடையநாதபுரம்,மெய்யப்பட்டி,பரக்கினிப்பட்டி கிராமத்தினர் 5 கி.மீ. துாரமுள்ள கே.வைரவன்பட்டிக்கு வந்து ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். அலைச்சலைத் தவிர்க்க பரக்கினிப்பட்டியில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் செயல்படும் சப் சென்டர்' ரேஷன்கடை அமைக்க கோரியுள்ளனர்.கண்டவராயன்பட்டி நவீன் கூறுகையில், இந்த இணைப்பு ரோட்டில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இந்த வழியில் வேகமாக செல்ல முடிவதில்லை.டூ வீலர்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.' என்றார்.கே.வைரவன்பட்டி பரமசாமி கூறுகையில், இப்பகுதி ரோடுகளில் மாடுகள் நடமாட்டம் விபத்துக்களை ஏற்படுத்துகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். ரோட்டோரங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதையும் உயர்த்தி கட்டினால் விவசாயிகளுக்கு நல்லது.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி