உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை, சிவகங்கையில் மின்தடை: பொதுமக்கள் பாதிப்பு

மானாமதுரை, சிவகங்கையில் மின்தடை: பொதுமக்கள் பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை, சிவகங்கையில் மின் தடை நீடித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மானாமதுரை,சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல்,கால்பிரவு,கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை,முனைவென்றி,குறிச்சி கச்சாத்தநல்லுார்,நல்லாண்டிபுரம், சங்கமங்கலம்,அன்னவாசல்,கீழப்பசலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை என மின் வாரியம் தெரிவித்திருந்தது. காலை 10:00 மணிக்கு சரியாக மின்தடை ஏற்பட்ட நிலையில் மதியம் 2:00 மணிக்கு மின்சாரம் வராமல் தாமதமாக 4:00 மணிக்கு மேல் மின்சாரம் வந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் கூறியதாவது: 4:00 மணிக்கு மேல் மின்சாரம் வந்த நிலையில் மீண்டும் மாலை 5:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்க முடியாமல் அவதிக்குள்ளானோம். மின்வாரிய அதிகாரிகள் சரியாக அறிவிப்பு செய்தால் அதற்கு தகுந்த மாதிரி நாங்கள் முன்னேற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும். மாதந்தோறும் ஏற்படும் மின்தடை நாளில் இதே போன்று குழப்பம் நீடித்து வருகிறது என்றனர். சிவகங்கையில் நேற்று மாலை மழை துாறல் மட்டுமே விழுந்த நிலையில் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை நீடித்ததால் மக்கள், வர்த்தகர்கள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி