மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
27-Sep-2025
திருப்புத்துார்; திருப்புத்துார் மதுரை ரோடு பகுதியில் பல மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். திருப்புத்துார் மதுரை ரோட்டில் முக்கிய வங்கி,வணிக, அரசு,தனியார் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் மின்விநியோகம் பாதித்தது. மதியம் 3:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணிக்கு மேலும் மின்தடை நீடித்தது. முன்னறிவிப்பில்லாத இந்த மின் விநியோகத் தடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். நகரில் பரவலாக பல இடங்களில் மின்விநியோகம் நேற்று சீராக இல்லாமல் மக்களின் அன்றாடப் பணி பாதிக்கப்பட்டது. மின்துறையினர் கூறுகையில், துணை மின்நிலையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பிரேக் பராமரிப்பு மற்றும் மதுரை ரோடு மின்மாற்றி பராமரிப்பே மின்விநியோகம் பாதிப்பிற்கு காரணம்' என்றனர்.
27-Sep-2025