உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆரம்ப சுகாதார நிலையம் மானாமதுரையில் திறப்பு டிரான்ஸ்பார்மரால் ஆபத்து

ஆரம்ப சுகாதார நிலையம் மானாமதுரையில் திறப்பு டிரான்ஸ்பார்மரால் ஆபத்து

மானாமதுரை: மானாமதுரையில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நடந்தது.மானாமதுரையில் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் மதுரை -ராமேஸ்வரம் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டை ஒட்டியுள்ள பகுதியில் ரூ.1.20 கோடி செலவில் புதிதாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து மானாமதுரையில் மாவட்ட கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.கோட்டாட்சியர் விஜயகுமார், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த சுகாதார நிலையம் முன்பு டிரான்ஸ்பார்மர் உள்ளது. சுகாதார நிலையம் திறக்கப்பட்டால் இங்கு வந்து செல்லும் மக்கள் சிரமமாக இருக்கும் என்பதால் இதனை மாற்றி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை எதையும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் நேற்று திறப்பு விழா நடத்தி விட்டனர்.டிரான்ஸ்பார்மரை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே மின்வாரியத்தினருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறுகின்றனர்.ஆனால் மின் வாரியத்தினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் டிரான்ஸ்பார்மரை அகற்ற கடிதம் வந்துள்ளதாகவும், அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ