மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்
01-Sep-2025
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
சிவகங்கை:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப் பாண்டியன், ஜீவா ஆனந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து மேல்முறையீடு செய்து பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
01-Sep-2025
16-Aug-2025