சிறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பரிசு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 31 இடங்களை மையமாக வைத்து 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்பிணிகளை அழைத்து செல்ல 3 தாய்சேய் நல வாகனங்கள் இயங்குகின்றன. இந்த வாகனங்களில் 90 பேர் டிரைவர்களாக பணிபுரிகின்றனர்.சிறப்பாக பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரகுராம், கார்த்திக் ராஜா, தாய் சேய் நல வாகன டிரைவர் பூபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றினை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். தேவகோட்டை சப்- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரராஜன், கைசர் பங்கேற்றனர்.