உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கவிதை, பேச்சு, கட்டுரை போட்டி வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு 

கவிதை, பேச்சு, கட்டுரை போட்டி வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு 

சிவகங்கை : தமிழ்வளர்ச்சி துறை மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த கவிதை, பேச்சு, கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு , சான்று வழங்கப்பட்டது.பள்ளி மாணவர் கவிதை போட்டியில் முதலிடம் தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலை பள்ளி பி.தயாழினி, இரண்டாம் பரிசு சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி ஆர்.சண்முகப்பிரியா, 3ம் பரிசு தேவகோட்டை டி.பிரிட்டோ மேல்நிலை பள்ளி ஆர்.அன்புச்செல்வன்.கட்டுரை போட்டியில் முதலிடம் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி கே.ராகுல், இரண்டாம் இடம் கோட்டையூர் சி.செ., மகளிர் பள்ளி ஆர்.தீபிகா, மூன்றாம் பரிசு தேவகோட்டை புனித மரியன்னை மகளிர் பள்ளி கே.மிதுஷா .பேச்சு போட்டியில் முதலிடம் தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலை பள்ளி மாணவி சி.சவுமியா, இரண்டாம் இடம் கோட்டையூர் சி.செ., மகளிர் பள்ளி ஏ.காளிமுத்து, 3 ம் பரிசு காரைக்குடி செஞ்சை எல்.எப்.ஆர்.சி., பள்ளி எஸ்.முத்துமாரி.கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில் கவிதையில் முதலிடம் தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி பி.ராஜாராமன், இரண்டாம் இடம் திருப்புத்துார் ஆ.பி.சீ.ஆ., கல்லுாரி எம்.பகவதி, மூன்றாம் பரிசு காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரி கே.பிரவீன்.கட்டுரை போட்டியில் முதலிடம் திருப்புத்துார் ஆ.பி.சி.ஆ., கல்லுாரி எம்.ஆர்த்தி, இரண்டாம் பரிசு காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜி., கல்லுாரி பி.ஆகாஷ், 3ம் பரிசு காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி வி.பவித்ரா .பேச்சு போட்டியில் முதலிடம் சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கல்லுாரி கே.செந்திவேலம்மாள், இரண்டாம் இடம் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மாணவி சி.ராஜபாரதி, மூன்றாம் இடம் புதுவயல் வித்யாகிரி கல்லுாரி என்.முகமது கைப்.முதல் பரிசு தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசு தொகை ரூ.7,000, மூன்றாம் பரிசு தொகை ரூ.5,000 வீதமும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை