தெருநாய்கள் பெருக்கம்: மக்கள் அச்சம்
தேவகோட்டை: தேவகோட்டை நகரில் தெரு நாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை செய்தும் நாய்கள் குறைந்த பாடில்லை. பள்ளிகள், கோவில்கள் அருகே அதிகளவு காணப்படுகிறது. சமீபகாலமாக பெருமாள் கோயில், காரைக்குடி மெயின் ரோடு, அண்ணாசாலை வீதியில் செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்லும் போது நாய்கள் விரட்டும் போது நிலைகுலைந்து தடுமாறி விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை உள்ளது.நகராட்சி அதிகாரிகளிடம் கூறினால் பீட்டா அமைப்பு, விலங்குகள் பாதுகாப்பு என ஏதாவது காரணம் சொல்கிறார்கள். தற்போது பன்றிகள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராம்நகர், எம்.எம்.நகர்., அண்ணாசாலை உட்பட சில பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் திரிகின்றன. நகராட்சி அதிகாரிகள் நாய், பன்றி தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.