உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தினசரி மார்க்கெட்டை மாற்ற திட்டம் கடைகளை அடைத்து போராட்டம்

தினசரி மார்க்கெட்டை மாற்ற திட்டம் கடைகளை அடைத்து போராட்டம்

தேவகோட்டை: தேவகோட்டையில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள தினசரி மார்க்கெட் இடத்தையும் சேர்த்து பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிட்டுள்ளனர். கல்லூரி ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை அருகில் புதிய மார்க்கெட் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அரசு நிதியும் ஒதுக்கி விட்டது. நிரந்தர கடைகள் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. நிரந்தர கடைகளை கட்டும் வரை கொரோனா நேரங்களில் இயங்கிய பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தினசரி மார்க்கெட்டில் கடைகளை காலி செய்ய நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நேற்று தினசரி மார்க்கெட் கடைக்காரர்கள் கடைகளை அடைத்து வியாபாரிகள் எம்.எல்.ஏ. மாங்குடி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கத்தை சந்தித்து முறையிட்டனர்.எம்.எல்.ஏ. மாங்குடி கட்சியினருடன் தினசரி மார்க்கெட்டை பார்வையிட்டார்.நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் துணை தலைவர் ரமேஷ் தி.மு.க. நகர செயலாளர் கவுன்சிலர் பாலமுருகன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் எம்.எல். ஏ . வை சந்தித்து திட்டங்கள் பற்றி விளக்கினர். சில மணி நேரத்திற்கு பின் கடைகளை திறந்தனர்.

கலெக்டரிடம் மனு

சிவகங்கையில் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கடை வைத்துஉள்ளவர்கள் சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டிய பின் அந்தந்த வியாபாரிகளுக்கு அதே இடத்தில் கடைகளை ஒதுக்கி தர வேண்டும். நகராட்சி நிர்வாகம் 30 நாட்களுக்குள் கடைகளை அகற்றிக்கொள்ள கூறியுள்ளது. கடைகளை அகற்றுவதற்கான கால அவகாசத்தை ஒரு ஆண்டிற்கு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் சங்க தலைவர் பெரியகருப்பன்தலைமையில் வந்த வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி