உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க எதிர்ப்பு  ஏப்.1 ல் நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க எதிர்ப்பு  ஏப்.1 ல் நகல் எரிப்பு போராட்டம்

சிவகங்கை:‛‛மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடக்கோரி,அரசாணை எண் 140 நகல் எரிப்பு போராட்டம் ஏப்., 1 ல் 8 மண்டல அலுவலகங்கள் முன் நடத்தப்படும்'' என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் எம்.பாலசுப்பிரமணி தெரிவித்தார். அவர் கூறியதாவது: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும். புதிதாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணைய உத்தரவு 140 யை திரும்ப பெற வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் ஏப்., 1 ல் சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உட்பட 8 மண்டல நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன் அரசாணை எண் 140 நகல் எரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை