உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செய்களத்துாரில் வாகனத்தை வழி மறித்து போராட்டம்

செய்களத்துாரில் வாகனத்தை வழி மறித்து போராட்டம்

மானாமதுரை: மானாமதுரை அருகே கோர்ட் உத்தரவை மீறி வனத்துறை அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி கிராம மக்கள் வனத்துறை வாகனத்தைச் சிறைபிடித்துப் போராட்டம் நடத்தினர்.மானாமதுரை அருகே செய்களத்துாரில் வனத்துறையினர் நாற்றங்கால் பண்ணை அமைக்க முயற்சி செய்து வந்த நிலையில் செய்களத்துார் மற்றும் கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட 9க்கும் மேற்பட்ட மானாவாரிக் கண்மாய்களுக்கு செல்லும் மழை நீர் வரத்து கால்வாய் தடைபடுவதால் நாற்றங்கால் பண்ணை அமைக்கக் கூடாதென்று கடும் எதிர்ப்பு, போராட்டம் நடந்தாலும் எதிர்ப்பையும் மீறி வனத்துறையினர் தொடர்ந்து கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்களை தடுத்து நாற்றங்கால் பண்ணை அமைத்து வந்தனர்.இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணையில் செய்களத்துாரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க தடை விதித்து மாற்று இடத்துக்கு எடுத்துச் செல்ல உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் வனத்துறையினர் தொடர்ந்து அத்துமீறி பண்ணை அமைக்கும் முயற்சியாக நேற்று மரக்கன்றுளை ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ