உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவ காப்பீடு திட்டத்தில்  மாற்றம் கோரி ஆர்ப்பாட்டம் 

மருத்துவ காப்பீடு திட்டத்தில்  மாற்றம் கோரி ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை; அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடுதிட்டத்தில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட கருவூலகம் முன் நடந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் தனபால், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் லதா, பொருளாளர் நாகராணி, சாலை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சதுரகிரி, பொதுப்பணித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நவநீதன், செயலாளர் பூமிநாதன், பிற்பட்டோர் நலத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோபால், செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் கார்த்திக், இணை செயலாளர் பயாஸ் அகமது, சின்னப்பன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !