உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி உபகரணம் வழங்கல்

பயிற்சி உபகரணம் வழங்கல்

சிவகங்கை: திருப்புத்துார் அருகே புதுக்காட்டாம்பூர் ஸ்ரீமுத்தையா மெமோரியல் கல்லுாரியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு இலவச பாட புத்தகம் மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தாளாளர் எம்.காசிநாதன் வரவேற்றார். முதல்வர் எஸ்.என்.வெங்கடேசன் வாழ்த்தினார். தொழில் பிரமுகர்கள் கண்டரமாணிக்கம் கேஆர். மணிகண்டன், எஸ்பி.எம்.ஆறுமுகம், ஜி. லட்சுமிகாந்தன், எஸ்.செல்வராஜ், எம்.பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். பயிற்சி முக்கியத்துவத்தையும், தற்போது உணவுத் துறை சார்ந்த வேலை வாய்ப்பு குறித்து பேசினர். பயிற்சி மாணவ, மாணவியர்களுக்கு பேக், புத்தகம், நோட்டு,பேனா இலவசமாக வழங்கப்பட்டது. பேராசிரியர் சிவராம மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ