உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொதுவினியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் 

பொதுவினியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது வினியோக திட்ட கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் பி.ஏ., புஷ்பலீலா வரவேற்றார். தேவகோட்டை சப் கலெக்டர் பி.ஏ., செல்வராணி, துணை பதிவாளர் பாபு, பாம்கோ நிர்வாக இயக்குனர் பாலு, கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பகீரதநாச்சியப்பன், அன்புத்துரை, பூமிநாதன், சதீஷ்பாபு பங்கேற்றனர். கூட்டத்தில் தாயுமானவன் திட்டம் மூலம் முதியோர் வீடு சென்று தரும் ரேஷன் பொருட்களில், வாங்காத பொருட்களுக்கும் குறுஞ்செய்தி வருகிறது. ரேஷன் கடைகளில் அலுவலகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் எடையாளர் என கூறிக்கொண்டு இருக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். காளையார்கோவிலில் அரசு கல்லுாரி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு முன்வரவேண்டும் என தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ