மேலும் செய்திகள்
அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி
23-Oct-2024
சிவகங்கை: காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் நவ.13ல் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மறவமங்கலத்தில் நவ.13 அன்று காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் துவங்கும். இதில் அனைத்து துறை மாவட்ட, வட்டார அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதில், பொதுமக்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படும். எனவே மறவமங்கலம் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் முகாமில் பங்கேற்று, அரசின் திட்டங்களை பெறுவதற்கான நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம், என்றார்.
23-Oct-2024