குறைந்த மின்னழுத்தம் தவிக்கும் பொதுமக்கள்
திருப்புவனம் : திருப்புவனம் புதுாரில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையம் மூலம் நகர்பகுதியில் மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றன. திருப்புவனம் புதுார் மேலத்தெரு, சின்ன மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கணவன், மனைவி என இருவருமே காலையில் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புகின்றனர். மாலை நேரத்தில் வீட்டிற்கு தேவையானவைகளை தயார் செய்து வைத்து கொள்வது வழக்கம், வீட்டில் குடிநீர் மோட்டார் இயக்க முடியவில்லை. பலமுறை மின்வாரியஅலுவலகத்தில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் தடையில்லா மின்சாரம் முழுமையாக விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.